மார்ச் 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மார்ச் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வீட்டிலிருந்தவாறு ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நேரலையை பார்வையிட கோயில் ஏற்பாடு செய்துள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!

ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹாயாக நிறைவு பூஜையின் நேரலையை https://heb.org.sg/ எனும் இணையத் தளத்தில் பார்வையிடலாம்:

காலை 08.30 மணிக்கு ஸ்ரீ நவாக்ஷரி ஜபம் ஹோமம் நிறைவு / த்ரிவயாஹூதி நடைபெறுகிறது. காலை 09.15 மணிக்கு கோ பூஜை / கன்யா பூஜை / சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. காலை 09.45 மணிக்கு வஸோதாரா/ வஸ்திர சமர்ப்பணம் மகா பூர்ணாஹுதி/ தீபாராதனை நடைபெறுகிறது.

விடுதியில் வசிக்கும் 30,000 ஊழியர்கள் வரை… 8 மணி நேரம்… சமூக பொது இடங்களுக்கு செல்ல அனுமதி

காலை 10.30 மணிக்கு ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.15 மணிக்கு யாத்ராதானம்/ அருட்சக்திகலசம் ஆலயம் வலம் வருதல்/ கலசாபிஷேகம், காலை 11.45 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

பாதுகாப்பு தூர இடைவெளி நடைமுறைகளால், கோயிலுக்குள் எந்நேரமும் 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. உபயகாரர்களுக்கும் பூஜைக்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

சிங்கப்பூர், பினாங்கு இடையே ‘VTL’ விமான சேவை- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

உங்களது புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 62595238 எனும் எங்களது அலுவலக எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.