ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் கூழ் பூஜை!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் கூழ் பூஜை!
Photo: Hindu Endowments Board

 

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) கூழ் பூஜை (Kool Poojai) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், கூழ் பூஜை நடைபெறும். அன்றைய தினம் காலை 08.00 மணிக்கு சங்கல்பமும், விக்னேஸ்வர பூஜையும், காலை 08.30 மணிக்கு ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு காயத்திரி மந்திர ஹோமமும், காலை 09.00 மணிக்கு பூர்ணாஹுதியும், காலை 09.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு கூழ் பூஜையும் நடைபெறும்.

இந்த கூழ் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். காலை 11.15 மணிக்கு மஹா தீபாராதனையும், காலை 11.45 மணிக்கு அன்னதானமும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், சுவாமி புறப்பாடும், இரவு 08.45 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊழியரின் உயிர் காக்க உதவுங்கள்: வேலையிடத்தில் விபத்து… ஆபத்தான நிலையில் ஊழியர் – உறவுகளை தேடும் நிறுவனம்

கூழ் பூஜையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கூழ் பூஜையில் கலந்து கொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.