புத்தாண்டு அன்று ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Hindu Endowments Board

இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கோவிட்- 19 கட்டுப்பாடுகளுக்கு இணங்க, ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) கீழ் வரும் மாற்றங்கள் புத்தாண்டு (1 ஜனவரி 2022) அன்று பொருந்தும்.

முகக்கவசம் அணியச் சொன்னது குத்தமா? – பேருந்து ஓட்டுனரை அடித்து தாக்கிய இருவர் (காணொளி)

காலை 06.30 AM மணி முதல் 11.30 AM மணி வரை மற்றும் மாலை 06.00 PM மணி முதல் இரவு 08.30 PM மணி வரை கோயில் திறந்திருக்கும்.

முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் கோயிலுக்குள் நுழைய விரும்பினால், நிகழ்ச்சிக்கு முந்தைய கோவிட்- 19 பரிசோதனையில் (Pre-Event Testing) தொற்று இல்லையென்று உறுதிச் செய்யப்பட்ட சான்றிதழைக் காண்பித்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

எந்நேரமும், 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த ஆவணம் இல்லாமல் Work pass வைத்துள்ளவர்கள், பிப்ரவரி 1, 2022 முதல் சிங்கப்பூரில் நுழையத்தடை!

இளநீர் அபிஷேகத்திற்கு பக்தர்கள் http://svkt.org.sg/Services/MassEvent எனும் இணையப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் இளநீர் அபிஷேகத்தைச் செலுத்தி விடுவார்கள்.

காலை 10.00 AM மணி முதல், இளநீர் அபிஷேகத்தின் நேரலையை https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தள பக்கத்தில் பார்வையிடலாம்.

12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களும் வீட்டிலிருந்தவாறு வழிபாட்டில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூர்- சீனா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.