விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை!
Photo: Hindu Endowments Board

 

விநாயகர் சதுர்த்தியையொட்டி (Sri Vinayagar Chathurthi), சிங்கப்பூரில் உள்ள இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board- ‘HEB’) கீழ் இயங்கும் ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple), ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple), ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple), ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple) ஆகிய கோயில்களில் விநாயகருக்கு செப்டம்பர் 19- ஆம் தேதி காலை முதல் அருகம்புல் அர்ச்சனை, மோதக அர்ச்சனை செய்யப்பட்டது.

“ஊழியரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை வந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்”- அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அசத்தல்!

பின்னர், பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய பால் குடங்களைக் கொண்டு விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டும், மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.