சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய இளைஞர்களுடன் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சாரம்!!

போதைப்பொருளை எதிர்த்து நிற்போம் - Standing up against drugs.!

சிங்கப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் மற்றும் சமூக ஆர்வலர் அம்ரின் அமின் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய இளைஞர்களுடன் வெள்ளிக்கிழமை (20 செப்) அன்று போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

சிங்கப்பூரின் இந்தியன் ரெஸ்டாரன்ட்ஸ் அசோசியேஷன், சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகம், நற்பணி பேரவை மற்றும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக் போன்ற 27 உணவகங்கள், கடைகள், சமூகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருட்களின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தனிநபர்களும் இதில் அவர்களுடன் கைகோர்த்தனர்.

இது குறித்து திரு விக்ரம் கூறுகையில் “இந்த போதைப் பழக்கம் தவறானது, அதை உபயோகிக்கத் தொடங்கக்கூடாது என்று மக்கள் தெரிந்து கொள்வது நல்லது. போதைப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டால் அதை நிறுத்துவது மிகவும் கடினம். போதைப் பழக்கத்தால் சிறைக்குச் செல்பவர்கள் மீண்டும் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு,” என்றார்.

‘போதைப்பொருளை எதிர்த்து நிற்போம்’ இயக்கத்தின் ஒட்டுவில்லைகளை ஒவ்வொரு கடையின் முன்பகுதியிலும் ஒட்டப்பட்டது.

மேலும், அம்ரின் கூறுகையில் “போதைப் பழக்கம் தனிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையையும் அவரின் குடும்ப உறவுகளையும் அழிக்கக்கூடியது. சாதாரண மக்கள், மக்கள் திரளும் இடங்களுக்குச் சென்று, இந்தப் பிரச்சினையைப் பற்றி மற்றவர்களிடம் எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்,” என்றார்.