பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் சிங்கப்பூர் அதிபர் பங்கேற்பு!

Photo: Singapore President Official Facebook Page

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பிரிட்டன் அரசக் குடும்பத்தினர், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த இருவர்… பாஸ்போர்ட் தர மறுப்பு – ஏன் இந்த வேலை?

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. அதைத் தொடர்ந்து, மகாராணியின் உடல் லண்டன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சில நாட்கள் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள், அரசக் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 19- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அவரது கணவர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரம்பரிய முறைப்படி தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு

மகாராணியின் உறுதிச் சடங்கில் 100- க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். குறிப்பாக, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

இது குறித்து சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணி, தனது நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், சிங்கப்பூர் ஒரு பெருமைமிக்க உறுப்பினராக இருக்கும் காமன்வெல்த் நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்தார். சிங்கப்பூரின் வரலாற்றில் ராணிக்கு தனிப் பங்கு உண்டு. சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறியபோது அவர் ராணியாக இருந்தார். அவர் மூன்று முறை சிங்கப்பூருக்கு (1972, 1989 மற்றும் 2006) அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டார், மேலும் அனைத்துத் தரப்பு சிங்கப்பூரர்களையும் சந்தித்தார். அவரது அரவணைப்பு, நல்ல நகைச்சுவை மற்றும் பணிவு ஆகியவற்றை பலர் இன்னும் நினைவு கூர்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த இருவர்… பாஸ்போர்ட் தர மறுப்பு – ஏன் இந்த வேலை?

இதனிடையே, பிரிட்டன் இளவரசராக இரண்டாம் எலிசபெத்தின் மகன் சார்லஸ் முடிச்சூடிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.