சாலையில் குத்துச்சண்டை: இணையத்தில் கடும் வைரலான வீடியோ

still-road-road fight
Uhhuhdon/TikTok video

சிங்கப்பூர்: ஜூ சியாட்டில் (Joo Chiat) உள்ள ஸ்டில் ரோட்டில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வைரலானது.

இந்நிலையில், அவர்கள் மீது காவல்துறை புகார் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தின் வீடியோ முதலில் டிக்டாக்கில் பதிவேற்றப்பட்டது.

அதன் பின்னர் அந்த வீடியோ இணையத்தில் கடுமையாக வைரல் ஆனது.

இதனை அடுத்து விசாரணைகள் நடந்து வருகின்றன.