சுகரினால் அவதிப்படுவோரின் கவனத்திற்கு ! – இனி இப்படி செய்து பாருங்கள்;நீரிழிவுக்கு சிறப்பான தொழில்நுட்பத்தை நாடும் பராமரிப்பாளர்கள்!

diabetes_SEITHIMEDIACORP - PIXABAY

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.எனவே,ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க சுகாதாரப் பராமரிப்பாளர்கள் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகின்றனர்.

இதன் உதவியுடன் நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.ரிச்சர்ட் இங் என்பவர் சுமார் 30 ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.நீரிழிவு நோயின் விளைவாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

நீரிழிவின் தாக்கத்தினால் கண்கள்,சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு பலவிதமான அறுவைசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்.எனவே,கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றியே தீர வேண்டும் என்று உறுதி பூண்டார்.

வாழ்க்கைமுறையை மாற்றியதன் வெளியீட்டைத் தினசரி அளவிட ரத்தச் சர்க்கரை அளவைக் காட்டும் கருவியையும் செயலியையும் பயன்படுத்தத் தொடங்கினார். அது,அவரது உடல்நலத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.

உணவு உட்கொண்ட பிறகும் உடற்பயிற்சிக்குப் பிறகும் ஏற்பட்டுள்ள ரத்தச் சர்க்கரை மாற்றத்தின் அளவை உடனுக்குடன் நோயாளிகளால் தெரிந்துகொள்ள முடிகிறது. இது நோயாளிகளை முறையான கட்டுப்பாட்டுக்கு வழிநடத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் பராமரிப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதைச் சமாளிக்கும் நீண்டகாலப் பராமரிப்பு முறைகள் பற்றியும் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு விளக்குவதே இதன் நோக்கமாகும்.