இளைஞர்களிடையே தற்கொலை விகிதத்தில் உயர்வா ! – மனஉளைச்சலில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாமே

youth

2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மொத்தம் 378 தற்கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டை விட 16.3%  குறைந்துள்ளதாக SOSஇன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக 10 முதல் 29 வயதுடைய இளைஞர்களின் இறப்புகளில், தற்கொலையே அதிக எண்ணிக்கையில் உள்ளது.

 

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தற்கொலைகளில்

10-29 வயது இளைஞர்களின் தற்கொலை விகிதம் மற்றும் இறப்புகள்

  • 2020 – 22.3%  (30 இறப்புகள்)
  • 2021 – 29.6%  (37 இறப்புகள்)

 60 மற்றும் 60+ வயது மேற்பட்ட முதியவர்களின் தற்கொலை இறப்புகள்

  • 2020 – 154 இறப்புகள்
  • 2021 – 112 இறப்புகள்

இளைஞர்களிடையே காணப்படும் அபயகரமான தற்கொலை விகிதங்களை ஒப்புக்கொண்ட SOS, இளைஞர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக பல்வேறு நெருக்கடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவரோ மன உளைச்சலில் இருந்தால், உதவி, ஆலோசனை பெற நீங்கள் அழைக்கக்கூடிய சில அழைப்புகள் இங்கே:

  • SOS இன் 24 மணிநேர ஹாட்லைன்: 1-767
  • மனநலத்திற்கான சிங்கப்பூர் சங்கம்: 1800-283-7019
  • மனநல நிறுவனம்: 6389-2222 (24 மணிநேரம்)
  • Tinkle Friend: 1800-274-4788 (ஆரம்பப்பள்ளி வயது குழந்தைகளுக்கு)