கடந்த ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை 13% அதிகரிப்பு

suicides report Singapore 2020
(Getty Images)

2020ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் தற்கொலைகளின் எண்ணிக்கையில் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தற்கொலை தடுப்பு நிலையமான Samaritans of Singapore (SOS) தெரிவித்துள்ளது.

மேலும், அந்த ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை 400இல் இருந்து 452ஆக உயர்ந்துள்ளது எனவும் அது கூறியுள்ளது.

இது 2012க்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கையிலான தற்கொலை சம்பவங்கள் என்றும் கூறியுள்ளது.

அனைத்து வயதினரும் இதில் அடங்குவர், 10 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள், 30 முதல் 59 வயது வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்களின் தற்கொலை விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களின் தற்கொலை விகிதமும் 1991க்குப் பிறகு அதிகரித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து 154 இறப்புகள் 26 சதவீதமாக அதிகரித்துள்ளன.