HDB, EDB திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களை நிறுவ சன்சீப் (Sunseap) மீண்டும் டெண்டரை கைப்பற்றியது !!

Sunseap wins tender again to install solar panels under HDB, EDB project

சன்சீப் (Sunseap) குழுமத்தின் பிரிவு, சன்சீப் லீசிங், 1,218 HDB பிளாக்ஸ் மற்றும் 49 அரசு தளங்களில் 170,000 க்கும் மேற்பட்ட சோலார் பேனல்களை நிறுவுவதற்கான டெண்டரை வென்றுள்ளது.

இதில் 30 பள்ளிகள், 13 பாதுகாப்பு அமைச்சக தளங்கள் மற்றும் தேசிய நூலக கட்டிடம் ஆகியவை அடங்கும்.

இந்த சோலார் பேனல்கள் பொருத்தும் பணி 2020 தொடக்கத்தில் தொடங்கி 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HBD) மற்றும் சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் கூட்டு சோலார்நோவா திட்டத்தின் நான்காவது குத்தகை டெண்டரின் கீழ் வருகிறது.

இது உள்நாட்டு நிறுவனமான சன்சீப் வென்ற இரண்டாவது சோலார்நோவா டெண்டர் ஆகும். மேலும், இது 2015 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறை ஆகும்.