சிங்கப்பூரில் K-pop ஆடவர் குழுவின் இசை நிகழ்ச்சி – நாளை முதல் டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம் !

Super Junior

பிரபல K-pop ஆடவர் இசைக் குழு சூப்பர் ஜூனியர் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. “Sorry, Sorry” என்னும் பிரபலமான பாடலின் தயாரிப்பாளர்களான இவர்கள். செப். 3, 2022 அன்று ” Super Show 9: Road ” இசைக் கச்சேரியை நடத்த உள்ளார்கள்

முன்பதிவுக் கட்டணத்தைத் தவிர்த்து, டிக்கெட்டுகள் S$198 முதல் S$328 வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

டிக்கெட் விலைகளுடன் இருக்கை வரைபடம் இதோ !

இருக்கை வரைபடம்

 

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 13, மாலை 4 மணி முதல் கீழ்க்கண்டவற்றின் மூலம் விற்பனை செய்யப்படும்

  • டிக்கெட் மாஸ்டரின் இணையதளம்
  • டிக்கெட் மாஸ்டரின் ஹாட்லைன்: +65 3158 8588
  • அனைத்து சிங்போஸ்ட் விற்பனை நிலையங்கள்