சிங்கப்பூரில் பேயாக பணிபுரிய அரிய வாய்ப்பு – சிங்கப்பூர் டாலர் S$1,500 சம்பளமாம் !

superspook-2 halloween 2022

பொழுதுபோக்கிற்காக நீங்கள் அடுத்தவர்களை பயமுறுத்த விரும்புபவரா ?. அதற்கு  ஊதியமும் பெற்றால் எப்படி இருக்கும் ? பேயாக இருப்பது உங்கள் விஷயம் என்றால், இந்த ஹாலோவீன் 2022 இல் சன்டெக் சிட்டியில் உள்ள சூப்பர்பார்க்கில் பயமுறுத்தும் நடிகராக நடிக்க நீங்கள் பதிவுசெய்யலாம்.

Fast Jobsஇல் வெளியிடப்பட்ட வேலை விளம்பரத்தின்படி, அக். 21 முதல் 23 வரை மற்றும் அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை 40,000 சதுர அடி உள்ளரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஆண்டு சூப்பர்ஸ்பூக் 2 நிகழ்வுக்காக பயமுறுத்தும் நடிகர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு முன் நடிகர்களை பயிற்றுவிக்கும் பயிற்சிக்கு தேர்வானவர்கள் வர வேண்டும் என்றும் 11 நாட்கள் வேலைக்கான ஊதியம் S$1,500 வரை பெறுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் வேலை நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த வேலை விளம்பரம் ஜூலை 29, 2022 அன்றுடன் காலாவதியாகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் உயரம், வயது, உருவப்படம் மற்றும் முழு நீளப் புகைப்படங்கள், நீங்கள் பேயாக இருந்த அனுபவம் உள்ளவரா போன்ற அடிப்படைத் தகவல்களை வழங்க வேண்டும்.