சிங்கப்பூரில் பிடிபட்ட 360 சந்தேக நபர்கள் – போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிளை திருடி
File Photo : Singapore Police arrested

சந்தேகத்திற்கிடமான மோசடி சம்பவங்களில் ஈடுப்பட்டதாக சுமார் 360 பேர் பிடிபட்டுள்ளனர், அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் $7 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை இழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வேண்டும்… 6 நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி

கடந்த ஜூன் 23 முதல் கடந்த வியாழன் வரை அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு வார அதிரடி சோதனையில் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பிடிபட்டவர்கள் 15 முதல் 77 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதில் 237 ஆண்களும் 123 பெண்களும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 1,200க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடிகளில் முதலீடு, மின்னனு வணிகம், கடன்கள், வேலை வாய்ப்புகள், நண்பர்கள் போல போலி அழைப்புகள், அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் மற்றும் இணைய காதல் போன்றவை அடங்கும்.

மோசடி, கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றம் செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

iPhone கைப்பேசிகளை அபேஸ் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை