புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட இனிப்புகள்!

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘ItsRainingRaincoats’ என்ற அமைப்பு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகள், உடைகள் உள்ளிட்டவைகளை அவர்கள் பணிபுரியும் இடத்திற்கும், அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கும் நேரில் சென்று வழங்கி வருகிறது.

நவம்பர் 7- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை!

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் ‘ItsRainingRaincoats’ வழங்கி வருகிறது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!’

அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இனிப்பு பாக்ஸ்களை ‘ItsRainingRaincoats’ விநியோகித்தன. இது குறித்து ‘ItsRainingRaincoats’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “புலம்பெயர்ந்த சகோதரர்களுக்காக 375 இந்திய இனிப்புகளை ஸ்பான்சர் செய்த ‘Onefort’ மற்றும் ‘Angel Sweets Kitchen’- க்கு IRR நன்றி தெரிவிக்க விரும்புகிறது! இந்த இனிப்புகள் வார இறுதி நாட்களில் பல தங்கும் விடுதிகளுக்கு IRR- தன்னார்வலர்களால் நேரில் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் உண்மையிலேயே தனித்துவமான இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.