குர்ஆன் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட நீச்சலுடைகள் விற்பனை – TIKTOK பயனர் முன் நிருத்திய கடும் விமர்சனம் !

Tiktoker critisising

குர்ஆன் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட நீச்சலுடைகள் மற்றும் பைஜாமாக்களை விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த கடை ஒன்று மன்னிப்பு கேட்டுள்ளது.

TikTok பயனர் ஒருவர், குர்ஆன் வசனங்கள் உள்ள ஆடைகளை விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஆடை வலைதளத்தை விமர்சித்துள்ளார். “இது எனக்கும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான முஸ்லிம்களுக்கும் மிகவும் அவமரியாதை” என்று TikTok பயனர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த அந்த TikTok பயனர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இந்த வீடியோவைப் பகிரவும் என்றும் , இணையத்தில் இதுபோன்ற விஷயங்களை இடுகையிடுவதற்கு சிங்கப்பூர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோ கிட்டத்தட்ட 15,000 பார்வைகளைக் கடந்தது.

Playmate ஆன்லைன் ஸ்டோர் என்னும் அத்தளம் அதன் வலைதளத்தில் அதன் அலுவலக முகவரியை Paya Lebar என குறிப்பிட்டிருந்தது. இந்தக் கடையானது சீனாவில் உள்ள அதன் சப்ளையர் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை விற்கிறது.
இது சமந்தமாக சிங்கபூரர் ஒருவர், Playmateஇன் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதி, TikTok வீடியோவையும் இணைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, Playmate மன்னிப்புக் கேட்டு கடையில் இருந்த முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து தயாரிப்புகளையும் அகற்றியது.