சுற்றுலா வரும் பயணிகளுக்கு செலவுக்கு பணத்தை வழங்கும் நாடு!

Wikipedia Image

தைவான் நாட்டு அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பணம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று தைவான் நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாங் குவோ-ட்சாய் (Minister of Transportation and Communications Wang Kwo-tsai) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, நடப்பாண்டில் தைவான் நாட்டிற்கு வரும் 5,00,000 சுற்றுலாப் பயணிகளுக்கு தலா 220 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதில் முகவர்கள் மூலம் தைவான் நாட்டிற்கு வரும் சுற்றுலாக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 440 சிங்கப்பூர் டாலர் முதல் 880 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது பற்றுச்சீட்டு வடிவில் வழங்கப்படும். அதனைக் கொண்டு அவர்கள் வேண்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

நடப்பாண்டில் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளை இலக்காக நிர்ணயித்துள்ள தைவான் அரசின், இத்தகைய அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் செலவுக்காக அந்த தொகை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கோடைக்கால விடுமுறை: திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை வரலாறு காணாத சரிவைக் கண்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.