தைவான் சுற்றுலாத் துறையின் அதிரடி அறிவிப்பு…வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Photo: Taiwan Tourism Bureau's Singapore

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், தைவான் நாட்டின் சுற்றுலாத் துறை (Taiwan Tourism Bureau) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் முதல் 5,00,000 சுற்றுலாப் பயணிகளுக்கு சிங்கப்பூர் மதிப்பில் 218 வெள்ளி மதிப்பிலான வவுச்சர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!

கடந்த ஏப்ரல் 24- ஆம் தேதி அன்று தைவான் சுற்றுலாத் துறையின் சிங்கப்பூர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பயணச் சலுகைகள் டிஜிட்டல் கார்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொகையாகவோ (அல்லது) தங்குமிட வவுச்சர்களாகவோ வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தைவான் தி லக்கி லேண்ட்” (Taiwan The Lucky Land) என்று அழைக்கப்படும் இந்த திட்டம், வரும் மே 1- ஆம் தேதி முதல் 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை நீடித்திருக்கும். தைவான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்காதவர்கள் மற்றும் தைவானில் 3 முதல் 90 நாட்கள் வரை தங்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இது உதவும்.

ஏஜென்சிகள் மூலம் விமானம் (அல்லது) கப்பல் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகைப் பொருந்தாது.

செங்காங் குழுத்தொகுதியில் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணியை வழங்கிய ஜேமஸ் லிம் எம்.பி.!

எனினும், தைவானுக்கு புறப்படுவதற்கு முன்பு இணையதளம் மூலம் இந்த சலுகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அந்த வவுச்சர்கள் தைவான் விமான நிலையத்தில் வழங்கப்படும்.

இத்தகைய சலுகைகள் காரணமாக, வரும் நாட்களின் தைவானுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.