தமிழ் மற்றும் இந்திய புத்தாண்டிற்கான நிகழ்ச்சி நிரல் குறித்த பட்டியலை வெளியிட்டது ‘லிஷா’!

Photo: Lisha Official Facebook Page

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் (Little India Shopkeepers and Heritage Association- ‘LISHA’) எனப்படும் ‘லிஷா’ சிங்கப்பூர் வாழ் தமிழர்களுடன் இணைந்து தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, தைப்பூசம் உள்ளிட்டப் பண்டிகைகளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது.

கனிமொழி எம்.பி.யின் கணவர் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி!

அந்த வகையில், வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டுக் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான நிகழ்ச்சி நிரல் பட்டியலை ‘லிஷா’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 4- ஆம் தேதி அன்று மாலை 03.00 மணிக்கு தேக்கா பகுதியில் ‘லிஷா’ அமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

ஏப்ரல் 8- ஆம் தேதி முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை நடைபெறும் தமிழ் மற்றும் இந்திய புத்தாண்டு (Tamil and Indian Newyear) கொண்டாட்ட நிகழ்வில், யோகா, சித்திரை கலை விழா, திருக்குறள் எழுதுதல் போட்டி, பேச்சுப்போட்டி, பாரம்பரிய இந்திய உணவைச் சமைப்பது உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.

துவாஸ் சவுத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.iny.sg/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.