ஹிந்தியில் மின்னஞ்சல் அனுப்பிய SBI வங்கிக்கு தனது பாணியில் செருப்படி கொடுத்த தமிழன்…!!

Tamil man refused hindi mail from SBI

தமிழ்நாடு என்ற மூங்கில் காட்டை பற்றி எரியச் செய்யும் தீக்குச்சியாகவே இந்தி இன்றளவும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஒரே நாடு , ஒரே மொழி என்ற கோணத்தில் இந்தியா என்றால் இந்தி. இந்தி தான் இந்தியாவின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னவுடன், தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு நின்று கண்டனங்களை பதிவு செய்தன.

ஆகவே, தமிழர்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை இந்தி திணிப்பு என்றால் பொங்கும் போர்குணம் உண்டு என்றால் அது மிகையாகாது.

அதில் ஒரு பகுதியில் தமிழர் ( நமது வாசகர்) ஒருவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து ஹிந்தியில் மின்னஞ்சல் பெற்றுள்ளார். பொதுவாக தமிழர்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் செய்திகள் அனுப்புவது தான் வங்கிகளின் வழக்கம். அதற்கு நேர் மாறாக எஸ்பிஐ ஹிந்தியில் இந்த செய்தியை அனுப்பவும் அதிர்ச்சியடைந்த தமிழர் செருப்படி கொடுக்கும் விதமாக அந்த மின்னஞ்சலுக்கு தமிழில் பதில் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் “மதிப்பிற்குரிய ஐயா அவர்களே எனது தாய்மொழி தமிழ் தயவு செய்து தமிழில் என்னவென்று கூறவும், நீங்கள் கீழே கூறிய தகவல் எதுவும் எனக்கு புரியவில்லை” என்று பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

பதில் மின்னஞ்சல்..!

மேலும், தமிழுக்கு தன்னால் முடிந்த சிறு முயற்சி என்று இந்த சம்பவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஹிந்தியை எந்த வழியில் திணிக்க முயன்றாலும் தமிழன் அதை எதிர்க்கும் போர்க் கருவியாக மாறுவான் என்பது நிதர்சனம்.