தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?

dbs-ocbc-uob-money-lock-scam-protect
(Photo: Asiaone)

தமிழ்நாட்டின் வங்கி மூலமாக சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு நாம் பணம் அனுப்ப முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.

சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கி கணக்கில் பணத்தை செலுத்த விரும்பும் நபரின் வங்கி கணக்கு எண், அந்த வங்கியின் SWIFT CODE போன்ற விவரங்கள் கண்டிப்பாக வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்திடம் பண மோசடி… சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்த நபரை தூக்கிய போலீஸ் – மேலும் சிலருக்கு வலைவீச்சு!

அதனை தொடர்ந்து, வங்கியில் Form A2 (Payment other than imports) என்ற படிவத்தை நிரப்பி சமர்ப்பித்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு நாம் பணம் அனுப்பலாம்.

நீங்கள் அந்த வங்கி கணக்குகளில் அதிகபட்சமாக எவ்வளவு பணத் தொகை அனுப்பலாம் என்பதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள வரைமுறைகள் உள்ளன.

உங்களிடம் ICICI போன்ற இந்திய வங்கிகளில் கணக்கு இருந்தால் NET BANKING என்ற இணைய வங்கி சேவை மூலமாகவே பணம் அனுப்ப முடியும்.