“ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” – பிரதமர் லீ

Sri Veeramakaliamman Temple / MCI

இன்று, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை சிங்கப்பூர் பிரதமர் திரு லீ தெரிவித்துக்கொண்டார்.

அதே சமயம் சீக்கியர்கள் வைசாகியையும் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் திரு லீ.

‘உன் மொத்த குடும்பமும் உயிரிழக்க நேரிடும்’… சம்பளம் கொடுக்கவில்லை என முதலாளிக்கே மிரட்டல்: பிடிபட்ட ஊழியர்!

மலையாளம், தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற பிற சமூக மக்களும் இந்த நேரத்தில் விஷு, உகாதி மற்றும் போஹெலா பைஷாக் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர், என்பதை சுட்டிக்காட்டினார் அவர்.

ஏப்ரல் மாதத்தில், பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் மதங்கள் ஒற்றுமையாய் புத்தாண்டுகளை கொண்டாடுகின்றனர். இந்த பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்கள் சிங்கப்பூரை வளமான சமூக நாடாக உருவாக்குவதாக அவர் கூறினார்.

“தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பண்டிகைகளை நாம் கொண்டாட முடியும், ஆனால் தொற்று பரவுவதைத் தடுக்க நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்” என்றார்.

குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் திரு லீ.

“பைக், கார் இருந்தால் தான் பள்ளிக்கு போவேன்” என்று சொல்லும் பிள்ளைகள் மத்தியில் 14 கிமீ மலையில் நடந்து சென்றே படித்த மாணவன்!