தமிழ் புத்தாண்டையொட்டி, லிட்டில் இந்தியாவில் பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!

Photo: Mothership

நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் லிஷா (Lisha) மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre- ‘IHC’) ஆகிய அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

“தமிழ் புத்தாண்டையொட்டி, இந்த நான்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூரில் ஷாப்பிங்- க்கு பெயர் போன லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீதியில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொருள்களை வாங்கக் குவிந்துள்ளனர். சித்திரை திருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்களது வீட்டில் படையலிடுவதற்கு தேவையான வாழை இலை, மாவிலை கொத்து, பூக்கள், பழங்கள், காய்கறிகள், தேங்காய்கள், இனிப்புகள், தோரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகை….செய்வதறியாது தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!

கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பொதுமக்கள் அதிகளவில் வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.