சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்

tamil singapore worker house stolen
TN Police

தமிழ்நாட்டின் சிதம்பரம் பகுதியில் உள்ள ஊழியர் ஒருவரின் வீ்ட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிங்கப்பூரில் பணிபுரியும் அவரின் வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள சுமார் 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தது சிங்கப்பூர் தான் ! – இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இடம் தேடி அலையும் அவலம்

சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த 56 வயதான ஜாபர் அலி என்ற அந்த ஊழியர், சிங்கப்பூரில் நிரந்தரவாசம் பெற்று குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜாபா் அலி தனது அண்ணன் மகளின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து சொந்த பகுதிக்கு கடந்த 1 ஆம் தேதி குடும்பத்துடன் திரும்பினார்.

சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற நிலையில், ஜாபர் மகள் லேப்டாப் மூலம் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களின் வீட்டின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மகளின் வேலை பாதித்தது. இணைய சேவைக்காக வேண்டி அவர்கள் அவரின் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் கேட் மற்றும் முன்பக்க கதவு பூட்டுகள் உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர்.

நண்பர் வீட்டில் இருந்து பள்ளிப்படை வீட்டுக்கு ஜாபர் வந்துள்ளார். அப்போது கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார், கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வானத்தில் பறக்கும் டாக்ஸி – இனி சிங்கப்பூரில் காற்று வழிப் போக்குவரத்துதான்!