விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்

(Photo: gocrowdera)

தமிழ்நாடு, தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஊழியர் முருகானந்தம் (வயது 45) என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார்.

அவர் சிங்கப்பூரில் பணிபுரியும் போது கிரெடிட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா சென்ற அவர், கொரோனா காரணமாக மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.

இந்நிலையில், முருகானந்தம் வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த மாத இறுதியில் கால் ஒன்று வந்துள்ளது, அதில் தாம் சிங்கப்பூர் போலீஸ் என்றும், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விரைவாக பணத்தை செலுத்த வேண்டும் என்றும் போனில் பேசிய மர்ம நபர் ஊழியரிடம் கூறியுள்ளான்.

அதில் இருக்கும் உண்மை தன்மையை அறியாமல் அதை நம்பிய முருகானந்தம் தனது மனைவியின் வங்கிக்கணக்கு மற்றும் இணைக் கணக்கு விவரம் மேலும் OTP எண் ஆகியவையை மர்ம நபரிடம் கூறியுள்ளார்.

அதை அடுத்து, மர்ம நபர் தனது வேலையை காட்ட தொடங்கினான், மனைவி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரம், இணை கணக்கிலிருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்தது பின்னர் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் முருகானந்தம், தஞ்சை சைபர் குற்ற போலீஸ் பிரிவில் இதுகுறித்து புகார் செய்தார்.

விசாரணை தொடர்கிறது.

சிரமப்பட்டு, மழை, வெயில் என்றும் பாராமல், சிங்கப்பூரில் உழைத்த அனைத்தும் வீணாய் போனது. இந்த சம்பவம் நமக்கே பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இனியாவது ஊழியர்கள் விழிப்புடன் இருங்கள்..

மோட்டார் சைக்கிள்-கார் விபத்து: நேரில் கண்ட சாட்சியை தேடும் குடும்பம்