ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Photo: TN Govt

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.

பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட் ஏவுதல் வெற்றி…. சிங்கப்பூரின் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

அடுத்த ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு சர்வதேச நிறுவனங்களை அழைக்கும் விதமாக, பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்திக்க, தமிழக அரசு செயல் திட்டங்களை வகுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் மே 23- ஆம் தேதி அன்று ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் வகையில் பயணத் திட்டம் தயாராகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 23- ல் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் குருபெயர்ச்சி விழா!

கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதன் முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு மார்ச் 24- ஆம் தேதி துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தார்.