தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்?- விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), தமிழகத்தின் எந்தெந்த நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, தமிழகத்தின் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

CCTV காட்சியில் சிக்கிய இருவர்…? வலைவீசி தேடிவரும் போலீசார்

இதில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் தொடர்ந்து இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

சிங்கப்பூருக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்யவிருக்கும் புருணை!

இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.