தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் புதிய வழிமுறை!

Singapore passengers-trichy-airport

விமான பயணிகளில் 2% பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை இனி இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

பேருந்து ஓட்டுனர்களைத் துன்புறுத்தும் பயணிகள்! – ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது!

கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்களுக்கு மட்டுமே இனி ஆர்டி- பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் முறை இனி இல்லை என்றும் தமிழகத்தின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வழிமுறை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் அமலுக்கும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

பேருந்து நிறுத்தத்தின்மீது சொகுசு கார் மோதி விபத்து – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

அதேபோல், அறுவைச் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கும், கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகப்பேறுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கும், இனி கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.