சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு சென்ற ஊழியர் மரணம் – பயணத்துக்கு முன் செய்யவேண்டியது என்ன?

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு சென்ற சென்ற ஊழியர் ஒருவர் நடுவானில் விமானத்திலேயே உயிரிழந்த செய்தியை நாம் அறிந்திருப்போம்.

அவர் விருதுநகரைச் சேர்ந்த 36 வயதான முனியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் அவர் சிங்கப்பூருக்கு வேலைக்காக புறப்பட்டார் என்றும், இங்கிருந்து சொந்த ஊருக்கு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஏர்போர்ட் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

அவர் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் பயணித்து வந்தார்.

இருதய பாதிப்பு உள்ள பயணிகள் விமான பயணத்துக்கு முன் செய்யவேண்டியது என்ன?

பயணத்திற்கு முன் உங்களின் உடல்நிலையை பரிசோதித்து கொள்ளுங்கள். அதாவது ஈசிஜி, இதய பரிசோதனை, எக்கோ கார்டியோகிராபி போன்ற சோதனைகள் அவசியம்.

எனவே, மருத்துவ சோதனையில் நீங்கள் தகுதி பெற்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள்.

நீண்ட நேரம் விமானத்தில் பயணிக்கும் நபர்கள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா போன்ற சிறிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அதிக தண்ணீர் குடிப்பது, சௌகரிகமான காலணிகளை அணியவும் ஊக்குவிக்கப்படுகிறது.

தேவை இருப்பின், கால்களின் வழியே இரத்தம் உறைவது போன்ற அபாயத்தைக் குறைக்க சுருக்க காலுறைகளை அணியலாம்.