சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்களின் கவனத்திற்கு..!

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரியும் உறவுகள், சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தங்கி வருகின்றனர்.

இதில் என்னவென்றால், உங்களில் பலர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள். உங்களின் வசிக்கும் பகுதிகளின் வெளிபுற பகுதிகளிலோ (வராண்டா) அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தள பகுதிகளிலோ புகைப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள்.

ஏனேனில், சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரிய (NEA) அதிகாரிகள் சீருடை இல்லாமல் பொதுமக்களோடு பொதுமக்களாக நம்முடைய வசிப்பிட பகுதிகளுக்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சமயம், புகைப்பிடித்து கொண்டிருந்தாலோ அல்லது நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையில்லாமல் வைத்திருந்தாலோ சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகையால் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் இதுபற்றிய எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

தகவல் : Durai Gobi