கட்டுமான கனரக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெளிநாட்டு ஊழியர்… பரிதாபமாக உயிரிழப்பு

Forklift Example Image: iStock

தெம்பனீஸ் நார்த்தில் அமைந்துள்ள BTO திட்டத்தின் கட்டுமான தளத்தில், ஃபோர்க்லிஃப்ட் என்னும் கட்டுமான வாகனம் கவிழ்ந்ததில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் அதிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

49 வயதான சீன நாட்டை சேர்ந்த அவர், சம்பவத்தின்போது ​​ஃபோர்க்லிஃப்ட் வாகனத்தை திருப்பிக் கொண்டிருந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.

கொடூரமாக சண்டையிட்டு கொண்ட இருவர்: வலைத்தளங்களில் வைரலான வீடியோ – நெட்டிசன்கள் அதிருப்தி

தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 64ல் உருவாகி கொண்டிருக்கும் Tampines GreenCrest BTO திட்டத்தின் கட்டுமான தளத்தில் இந்த அபாயகரமான சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கடந்த புதன்கிழமை (பிப். 23) மாலை 5 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

அதனை அடுத்து அந்த ஊழியர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அப்போது அவர் மயக்கநிலையில் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது, அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சீனா கன்ஸ்ட்ரக்ஷன் (தெற்கு பசிபிக்) டெவலப்மென்ட் நிறுவனத்தின் பணிபுரிந்தார்.

இந்த சம்பவம் குறித்து MOM மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த தளத்தில் நடைபெறும் அனைத்து ஃபோர்க்லிஃப்ட் செயல்பாடுகளையும் நிறுத்துமாறு அமைச்சகம் நிறுவனத்திடம் கூறியுள்ளது.

Work Permit வைத்துள்ளவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் நுழைய அனுமதி!