பசை வகை பொறியில் சிக்கி தவித்த பூனைக்குட்டி – பிறகு என்ன ஆனது? Tampines wet market சம்பவம் வைரல் (வீடியோ)

Tampines wet market kitten stuck in glue trap
Grace Chai/FB

தெம்பனீஸில் பூனைக்குட்டி ஒன்று பசை வகை பொறியில் சிக்கி பரிதாபமாக நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பூனைக்குட்டியின் வீடியோவை ஃபேஸ்புக் பயனர் ஒருவர் கடந்த பிப்ரவரி 27 அன்று பதிவேற்றியுள்ளார்.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

நான்கு வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில், கருப்பு பசை பொறியில் சிக்கிய பூனைக்குட்டியால் உடலை அசைக்க முடியாமல் பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பதை காண முடிகிறது.

அதனை பின்னர் அதே நாளில், விலங்குகள் வதை தடுப்பு அமைப்பு (SPCA) பிறந்து மூன்று மாதங்களே ஆன அந்த பூனைக்குட்டியை மீட்டது என்று பேஸ்புக் பதிவில் கூறப்பட்டது.

பூனைக்குட்டி மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டது, ஆனாலும் கூட அதன் ரோமங்கள் இன்னும் பசைபசைப்பாக இருந்ததால் இன்னும் அதிக சுத்தம் தேவைப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

மேலும் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசி விரைவில் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனைக்குட்டி பசை பொறியில் இருந்து மீட்கப்படுவதற்கு முன்பு சுமார் ஏழு மணி நேரம் சிக்கியிருந்தது என Coconuts Singapore கூறியுள்ளது.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்