தெம்பனீஸில் ஆயுதத்தை வைத்து சுழற்றிக்கொண்டு, தன்னை தானே தாக்கிக்கொண்ட பெண் – டேசர் மூலம் சுட்டு கைது

தெம்பனீஸில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே கத்தியை வைத்து சுழற்றிக்கொண்டிருந்ததாக 53 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மற்றவரை தாக்கும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (செப். 19) மாலை செயின்ட் ஹில்டாஸ் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள பிளாக் 840 தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 82க்கு அருகில் இருந்த இந்த பெண் தொடர்பாக மாலை 6.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அதிக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முக்கிய நிறுவனம் – “போதிய வருவாய் இல்லை” என இந்த முடிவு

சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்தபோது, ​​​​அந்த பெண் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் காவல்துறையின் அறிவுறுத்தல்களை காதில் வாங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்போது அந்தப் பெண் தன் வயிற்றில் குத்திக் கொண்டு மேலும் காயப்படுத்தி கொள்வேன் எனவும் அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து பெண்ணின் பாதுகாப்பிற்காக, போலீஸ் அதிகாரி ஒருவர் டேசர் துப்பாக்கியை பயன்படுத்தினார்.

இந்நிலையில், அந்த பெண் மனநல சட்டத்தின் கீழும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் சுயநினைவுடன் மற்றும் சீரான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு