தானா மேரா, டெசாரு இடையேயான படகுச் சேவை தொடங்கியது!

Photo: BatamFast

சிங்கப்பூரின் தானா மேராவில் (Tanah Merah) இருந்து மலேசியாவின் டெசாருக்கும் (Desaru Coast Ferry), டெசாருவில் இருந்து தானா மேராவுக்கும் என இரு மார்க்கத்திலும் படகுச் சேவையை ஜூலை 7- ஆம் தேதி அன்று தொடங்கியது பாதாம் ஃபாஸ்ட் படகுச் சேவை நிறுவனம் (Batam fast’s).

ரயிலில் ஏற்பட்ட பழுதால் 15 நிமிடம் தாமதம் – பயணிகள் அவதி !

படகுச் சேவை தொடங்கப்பட்டதையொட்டி, பயணிகளுக்கு பயணக் கட்டணத்தில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு வழி பயணத்திற்கு பயணச்சீட்டு 70 சிங்கப்பூர் டாலரும், திரும்புதலுக்கான பயணச்சீட்டு 98 சிங்கப்பூர் டாலரும் செலுத்த வேண்டும். வாரத்தில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் படகுச் சேவை வழங்கப்படும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, படகுச் சேவை அதிகரிக்கப்படும்.

சிறப்பு சலுகை கடந்த ஜூலை 7- ஆம் தேதி முதல் அக்டோபர் 6- ஆம் தேதி வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணமின்றி NS55 கிரெடிட்களை மாற்ற வேண்டுமா, அப்படினா இப்படி பண்ணுங்க !

தானா மேராவில் இருந்து படகு காலை 08.30 AM மணிக்கு புறப்படும். அதேபோல், டெசாருவில் இருந்து படகு மாலை 05.30 PM மணிக்கு புறப்படும். படகுச் சேவையில் பயணிப்பவர்கள் பாஸ்போர்ட், விசா, கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்த படகுச் சேவை தொடர்பான பயண அட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.batamfast.com/home/index.ashx என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.