தஞ்சோங் பகார் விபத்து: காதலனைக் காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு கடுமையான தீ காயம்….

(Photo: Song Seng Wun / Facebook)

தஞ்சோங் பகார் (Tanjong Pagar) சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலியான ஐந்து நபர்களில் ஒருவரை காப்பாற்ற ஒரு பெண் முயன்றதாக, 5 பேரில் ஒருவருடைய நண்பர் கூறியுள்ளார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டார்.

தஞ்சோங் பகார் கடைவீட்டில் பயங்கர தீ… 5 பேர் உயிரிழப்பு

சம்பவம் குறித்து அதிகாலை 5.40 மணியளவில் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

5 பேரில் ஒருவருடைய நண்பரான திரு அகிரா சான் (வயது 21) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இப்பகுதியில் பிரபலமான கொரிய உணவகத்தை நடத்தி வருகிறார், என்றார்.

அந்த நேரத்தில் திரு சான் உணவகத்தில் இருந்ததாகவும், கார் விபத்து சத்தம் கேட்டு திரும்பி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரில் இருந்த திரு சானின் நண்பரின் வருங்கால மனைவி, நண்பரை காப்பாற்ற காரின் கதவைத் திறக்க முயன்றார், அதனால் அவர் தீக்காயங்களுக்கு ஆளானார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், சிங்கப்பூர் பொது மருத்துவமனை தீக்காயங்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ST குறிப்பிட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் உணவகத்தில் இருந்த திரு சான் மற்றும் அவரின் மற்ற நண்பர்கள் விபத்துக்கு சாட்சியாக இருந்ததாகவும், காவல்துறை விசாரணையில் உதவுவதாகவும் கூறினார்.

திருச்சி விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா… பயணிகள் அதிர்ச்சி