தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்

tanjong-pagar-worker-dead
SCDF/Facebook.

Tanjong Pagar collapsed: தஞ்சோங் பகார் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 20 வயதான இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது, அதில் சிக்கி மாண்ட இந்திய ஊழியர் 8 மணிநேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார்.

லிட்டில் இந்தியாவில் புல்வெளியில் தவித்த இந்தியர்கள் – விசிட்டிங் வந்தவர்கள் அவதி

1 பெர்னாம் ஸ்ட்ரீட்டில் உள்ள Fuji Xerox Towers கட்டிடத்தின் ஒரு கான்கிரீட் சுவர் பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (ஜூன் 15) பிற்பகல் 02.00 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அங்கு பணிபுரிந்த 20 வயதுமிக்க ஊழியரை காணவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணி தீவீரமாக நடந்தது.

தேடலின் இறுதியாக சுமார் 6 மணியளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த ஊழியர் கண்டறியப்பட்டார். பின்னர் 4 மணிநேரத்துக்கு பிறகு அவர் மீட்கப்பட்டார்.

அவர் சுமார் 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சோதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

தேடல் பணிகள் நடந்து வருகின்றன. பதிவு தொடரும்..

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி