சாதிப்பதற்காக சிங்கப்பூர் வந்த தமிழ்நாட்டு ஊழியர்; கனவுகளை களைத்த விபத்து… காரணம் என்ன?

tanjong-pagar-worker-dead
SCDF/Facebook.

தஞ்சோங் பகார்: கட்டடத்தை இடிப்பதற்கு முறையான அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையைப் பின்பற்றத் தவறியதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அந்த கட்டிடத்தில் ஏற்கனவே இருந்த குறைபாடுகளும் அது இடிந்து விழுந்ததற்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என பொறியியல் நிபுணர்கள் கூறியதாக சிஎன்ஏ குறிப்பிட்டுள்ளது.

ஆண்டிபட்டி to சிங்கப்பூர்… பறித்த 16 மணி நேரத்தில் விற்பனையாகும் வெண்டிக்காய் – அதிக லாபம் ஈட்டும் ஏஜெண்டுகள்

கட்டிடத்தை இடிக்கும்போது அதில் அதிக இடிபாடு கற்கள் அல்லது அதிக அளவில் கனரக உபகரணங்களை ஏற்றாமல் இருப்பது உள்ளிட்ட முறையான நடைமுறைகளை ஒப்பந்ததாரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

விபத்துகளை ஏற்படுத்த சாத்தியமுள்ள தற்செயலான சுமைகள் கூட கட்டிட இடிபாடுகளுக்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் கூறினார்.

எதுவாக இருந்தாலும் முறையான பாதுகாப்பு மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு அணுகுமுறைகள் மிக அவசியம்.

தஞ்சோங் பகாரில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி கட்டிட இடிபாடுகளில் சிக்கி தமிழ்நாட்டின் திருப்பத்தூர் ஊழியர் வினோத் குமார் (20) என்பவர் உயிரிழந்தார்.

முழு விவரங்கள்:

தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்

ஈடுகட்டமுடியாத தமிழக ஊழியரின் இழப்பு – துயரில் மூழ்கிய குடும்பத்துக்கு உதவிக்கரம்

சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற வினோத் குமார் உடல் – சாதிக்க வந்த இளைஞன் சவப்பெட்டியில்… கதறிய குடும்பம்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்