ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு!

ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு!
Photo: Facebook/ Jabatan Bomba dan Penyelamat Malaysia

 

சிங்கப்பூர்- மலேசியா எல்லையான ஜோகூரில் பாருவில் (Johor Bahru) உள்ள துவாஸ் இரண்டாவது இணைப்பில் (Tuas Second Link) உள்ள தஞ்சங் குபாங் சுங்கச்சாவடியில் (Tanjung Kupang toll plaza) இன்று (டிச.22) காலை 05.50 மணிக்கு பல வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்தது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எச்சரிக்கை

இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களில் சிங்கப்பூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இரண்டு பேர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவரின் வயது 49 என்றும், மற்றொருவரின் வயது 54 என்றும் மலேசியா காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவலறிந்து வந்த மலேசியா காவல்துறையினர், இருவரின் சடலங்களை மீட்டு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோகூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு!
Photo: Facebook/ Jabatan Bomba dan Penyelamat Malaysia

பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், விபத்துக்கு காரணமான, 45 வயதான லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரேக் பிரச்சனை காரணமாக, லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் TOTO டிராவில் முதல் பரிசை யாரும் வெற்றி பெறாததால் “12 பேருக்கு அடித்த செம்ம அதிஷ்டம்”

இந்த லாரி, 29 பயணிகளுடன் சென்று பேருந்து மற்றும் டிரெய்லர் (Trailer)ஆகிய வாகனங்கள் மீது மோதியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், உயிரிழந்த வாகன ஓட்டிகள், சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.