சிங்கப்பூரில் டிஜிட்டல் வளர்ச்சி மையத்தை தொடங்க உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)..!

Tata unit to launch digital acceleration centre in Singapore
Tata unit to launch digital acceleration centre in Singapore (Photo: TCS)

சிங்கப்பூரில் டிஜிட்டல் வளர்ச்சி மையத்தை தொடங்குவதற்கான திட்டங்களை டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அறிவித்துள்ளது.

உள்ளூர் பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு SGUnited பயிற்சி திட்டங்கள் மூலம் 100 திறன் பயிற்சிகள் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 463 புதிய COVID-19 சம்பவங்கள் பதிவு – சமூக அளவில் 18 பேர் பாதிப்பு..!

பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் (EDB) ஆதரவோடு உருவாக்கப்பட்ட இந்த மையம், உள்ளூர் வணிகங்களுக்கும் COVID-19 சூழலில் இருந்து மீள உதவுவதோடு எதிர்காலத்தில் தயாராக இருக்கும் ஊழியர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது நாட்டின் ஊழியர்களின் மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பிற்கு பங்களிப்பதற்கான திறமையான கூட்டாண்மை மற்றும் முன்முயற்சிகளை நிறுவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஸ்மார்ட் நேஷன் முயற்சிகளுக்கு ஆதரவாக அடுத்த 12 மாதங்களில் சுமார் S$3 மில்லியனை முதலீடு செய்வதாக ஐடி சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..!