கை நிறைய சம்பாதிச்சாலும் இப்படியொரு நிலை வருமா? சிங்கப்பூரில் பணக்கார பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்!

PIC: TODAY

சிங்­கப்­பூ­ரில்அதிக வரு­மானத்தை ஈட்­டும் பிரி­வி­ன­ர் அதிகப்படியான சிரமங்களை எதிர்கொண்டனர்.

மற்ற வரு­மா­னப் பிரி­வி­ன­ரைக் காட்­டி­லும் உய­ரும் பய­னீட்­டா­ளர் விலை­க­ளால், இந்த ஆண்டின்  முதல் பாதி­யில் பெரும் பாதிப்பு அவர்களுக்கு நேர்ந்­த­தாக புள்­ளி ­வி­வ­ரத்துறை தெரி­வித்­துள்­ளது.

சமீபத்தில் வெளி­யிடப்பட்ட தரவு­க­ளின்­படி, அதிக வரு­மா­ன­முள்ள நாட்­டின் முதல் 20 விழுக்­காட்­டி­ன­ருக்குப் பய­னீட்­டாளர் விலை­கள் கணிசமாக உயர்ந்துள்ளது.

இது சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு பதிவான அதிகரிப்பு 6 சதவீதம் அதிகமாக இருந்­தது.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோர், அதா­வது நாட்­டின் 20 விழுக்­காட்­டி­னர், 4.2 சதவிகித அதி­க­ரிப்­ப எதிர்கொண்டனர்.

அதேவேளையில்  இடைப்­பட்ட நடுத்­தர வரு­மா­ன­மு­டைய 60 விழுக்­காட்­டி­னர் 4.9 சதவிகித அதி­க­ரிப்­பை­ இதே கால­கட்­டத்­தில் உணர்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

கார்­கள், பெட்­ரோல், இதர போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் போன்­றவற்றின் விலை இவ்­வாண்டு கணி­ச­மாக உ­யர்ந்­து­விட்­ட­தால் அவை அதிக வரு­மா­னம் ஈட்­டு­வோர் மீது பெரும் பாதிப்பை ஏற்­படுத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும் தொலைத்­தொ­டர்­புச் சேவை­க­ளுக்­காக கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் அனைத்து வரு­மா­னப் பிரி­வி­ன­ரும் குறைந்த கட்­ட­ணம் செலுத்­தி­யுள்­ள­தாக புள்­ளி­வி­வ­ரத் துறை குறிப்­பிட்­டுள்­ளது.