வாகனத்தில் சடலமாக இறந்து கிடந்த ஓட்டுநர் – இயற்கைக்கு மாறான மரணம் குறித்து விசாரணை

bedok-reservoir-road-taxi-driver-dead
zaobao.com.sg & Google Maps

பிளாக் 117 Bedok Reservoir சாலையில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் 67 வயதான டாக்சி ஓட்டும் ஊழியர் ஒருவரின் சடலம் கிடந்ததாக zaobao.com.sg கூறியுள்ளது.

டாக்சியில் அசைவில்லாமல் இருந்த அவரை மருத்துவ உதவியாளர்கள் வந்து பார்த்து, ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

வெளிநாட்டில் கணவருக்கு வேலை… மனைவியின் தகாத காதல் – இதனால் நேர்ந்த கொடூரம்…!

இச்சம்பவம் நேற்று ஜனவரி 29, 2022 சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு முன்னதாக நடந்துள்ளது.

நேற்று ஜன. 29 அன்று மாலை 5:46 மணி அளவில் இயற்கைக்கு மாறான இந்த மரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சதிச்செயல் ஏதும் நடக்கவில்லை என தெரியவந்துள்ளது.

விசாரணை நடந்து வருகிறது.

10வது மாடியில் பற்றி எரிந்த தீ: மயங்கி கிடந்த பெண்…ஆடவர் கைது