தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய ஸ்கூட்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் (Perth) நகரில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது ஸ்கூட் நிறுவனம் (Flyscoot).

ஜூலை 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பௌர்ணமி வழிபாடு!

அந்த வகையில், ஜூலை 11- ஆம் தேதி அன்று இரவு 07.00 PM மணியளவில் பயணிகளுடன் பெர்த் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட TR009 என்ற ஸ்கூட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினர் விமானிகள்.

அதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் விமானத்தில் சோதனை செய்தனர். அதில் விமானத்தில் சில உதிரி பாகங்கள் மாற்ற வேண்டியிருந்ததாகவும், அவை பெர்த்தில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் Work pass அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கும் ஊழியர்கள் – காரணம் என்ன?

இது குறித்து ஸ்கூட் நிறுவனம் பயணிகளிடம் கூறியதாவது, “ஜூலை 12- ஆம் தேதி அன்று மாலை 06.00 PM மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும் ஸ்கூட் நிறுவனத்தில் TR009 என்ற விமானத்தில் இடமிருந்தால், அதில் பயணிகள் பயணம் செய்யலாம். இல்லையென்றால் இரவு 09.00 மணிக்கு மாற்று விமானம் வரும் அதில் பயணம் செய்யலாம்” எனத் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, உள்ளூர் பயணிகளை அவர்களது சொந்த இல்லங்களுக்கு செல்ல அறிவுறுத்திய ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரிகள், மற்ற பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்தனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவையையும் வழங்கப்பட்டது.

சிங்கப்பூரர்களே! கவலை எதுக்கு ? – பணவீக்கதைச் சமாளிக்க அரசு வழங்கும் ரொக்கத்தொகை

பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கும், சிரமத்திற்கும் ஸ்கூட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.