கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்குதல் (வீடியோ): போலீசார் கடும் எச்சரிக்கை

Wake Up Singapore

ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலுக்கு வெளியே கியோங் சைக் (Keong Saik) சாலையில் மஞ்சள் நிற சைன்போர்ட் பலகையை ஒருவர் குழந்தையின் மீது தட்டி விட்டு தாக்கும் காணொளி இணையத்தில் பரவியது. அதை அடுத்து, நான்கு ஆடவரை போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், அந்த அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி காலை இழந்த தமிழக ஊழியர்: “நம்ம ஊழியருக்கு நாம தான் உதவனும்” – முழு ரிப்போர்ட்

இந்த சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8:30 மணியளவில் நடந்தது.

நேற்று ஜனவரி 26 அன்று, சம்பந்தப்பட்ட இரண்டு வாலிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது என்றும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அவர்களிடம், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், அடுத்தவர் சொத்துகளை அபகரித்ததற்காகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

முழு விவரம்: கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்கிய ஆடவர் – 4 பேர் மீது போலீஸ் விசாரணை

விமானம் ரத்து: Scoot, SIA விமானங்களை சாடிய வெளிநாட்டவர் – ஒழுங்கீனமில்லை என காட்டம்