இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான முகநூல் பதிவுகள் – தெமாசெக் கண்டனம்..!

இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்
(Photo: Reuters)

தெமாசெக் முதலீட்டு நிறுவனத்தின் இந்திய ஊழியர்களை குறிவைத்து முகநூலில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த பதிவுகள், இனவாதத்தை தூண்டும் என்றும், சமூகப் பிளவு மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வசதிகுறைந்த சுமார் 900 குடும்பங்களுக்கு உறையவைக்கப்பட்ட உணவு..!

சமூக ஊடங்களில் இதுபோன்ற பதிவுகளில் நாகரிகம் தேவை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் linkedIn கணக்குகளை மேற்கோள் காட்டும் பதிவுகள் இடப்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களை வேலைக்கு அமர்த்தாமல் வெளிநாட்டவர்களை ஏன் வேலைக்கு அமர்த்தவேண்டும் என்று அந்த பதிவுகள் இடம் பெற்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் இந்திய ஊழியர்களை குறிவைக்கும் அத்தகைய முகநூல் பதிவுக்கு தெமாசெக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய ஊழியர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் பதிவுகள் மற்றும் பொய் குற்றச்சாட்டுகள் இடம் பெறுவதாக அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், மேலும் தெமாசெக் நிறுவனத்தில் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் இதுபோன்ற பதிவுகளால் வெட்கம் அடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர்களுக்கும் தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கும் அதே வேளையில், வெளிநாட்டு திறமையாளர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கவேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அது முட்டாள்தனம் என்று தெமாசெக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் திறக்கப்படும் சிங்கப்பூர்-மலேசிய எல்லை; உச்ச அளவை எட்டிய பயண விண்ணப்பங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg