சிங்கப்பூரில் அதிக பாதுகாப்பு கொண்ட இலவச முகக்கவசங்கள் இன்று முதல்…

(Photo: Joshua Lee)

சிங்கப்பூரில், மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை மீண்டும் இலவசமாக Temasek அறக்கட்டளை விநியோகம் செய்கிறது.

நான்காவது முறையாக இலவசமாக வழங்கப்படும் முகக்கவசங்களை இன்று முதல் தானியக்க இயந்திரங்களில் சிங்கப்பூர்வாசிகள் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியரின் விவரம்!

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு தழுவிய முறையில் முகக்கவசங்கள் விநியோகம் நடந்து வருகிறது.

இந்த முகக்கவசங்கள் அதிக பாதுகாப்பை கொண்டது மற்றும் முந்தைய மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களுடன் ஒப்பிடும்போது இதனை வாரம் ஒரு முறை கழுவினால் போதுமானது.

முழு பருத்தி துணியால் ஆன இந்த முகக்கவசம் கிருமித்தொற்றை செயலிழக்கச் செய்து பாதுகாப்பை வழங்குகிறது.

முகக்கவசங்கள் இன்று காலை 10 மணி முதல் மார்ச் 14, 11:59 மணி வரை கிடைக்கும்.

அடையாள அட்டை அல்லது அரசாங்க அடையாள ஆவணம் மூலம் குடியிருப்பாளர்கள் முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிங்கப்பூரில் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 216 பேர் மீது விசாரணை!