உலகின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்பு – சிங்கப்பூரில் திறப்பு

tengeh-floating-solar-farm
Photo: Mothership

தெங்கா நீர்த்தேக்கத்தில், சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.

சூரிய சக்தி கட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக செம்ப்கார்ப் மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்பு, செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் (செம்ப்கார்ப்) துணை நிறுவனம், தேசிய நீர் அமைப்பான PUB ஆகியவையால் இன்று ஜூலை 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த கட்டமைப்பை பிரதமர் லீ சியென் லூங் பார்வையிட்டார், மேலும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கலந்து கொண்டார்.

இது 45 ஹெக்டேர் பரப்பளவு அல்லது சுமார் 45 கால்பந்து மைதானங்களுக்கு சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய சக்தி கட்டமைப்பின் கழுகு பார்வை:

சிங்கப்பூரில் உள்ள அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது சிறப்பம்சம்.

இதில் 122,000 சோலார் பேனல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, 16,000 4 அறைகள் கொண்ட HDB வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு சமம்.

Photo: Fiona Tan

உலகில் மிக அதிகமாக சூரிய சக்தி உற்பத்தி ஆற்றல் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என திரு. லீ குறிப்பிட்டுள்ளார்.