டெஸ்லாவில் ஆட்குறைப்பு – சிங்கப்பூர் மேலாளர் பணிநீக்கம் – எலோன் மஸ்க் அதிரடி

tesla elon must singapore manager

டெஸ்லாவின் பணியாளர்களில் 10 % ஆட்களை குறைக்கும் திட்டங்களுடன், எலோன் மஸ்க் முன்னேறி வருவதாகத் தெரிகிறது. ஜூன் 3 அன்று, டெஸ்லாவின் CEO மின்னஞ்சலில் தனது ஊழியர்களிடம் “பொருளாதாரத்தைப் பற்றி “மிக மோசமான உணர்வு” தனக்கு இருப்பதாகவும், “உலகளவில் பணியமர்த்தத்தை நிறுத்துமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகவும்கூறியுள்ளார். மேலும், TESLA நிறுவனம் “பல பகுதிகளில் அதிக பணியாளர்களை கொண்டு இருப்பதாகவும் , சம்பளம் பெறும் ஊழியர்களில் பத்தில் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்ய விரும்புவதாகவும் தனியொரு மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டார்.

 

2021 ஆம் ஆண்டின் இறுதியில் டெஸ்லாவில் சுமார் 100,000 ஊழியர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 10 சதவீத ஊழியர்களில் சிங்கப்பூர் நாட்டின் TESLA மேலாளர் Christopher Bousigues-ம் ஒருவர் ஆவார்.

இரண்டு டெஸ்லா ஷோரூம்கள் நிறுவியது , ஒரு சர்வீஸ் சென்டர், மேலும் தீவு முழுவதும் சூப்பர்சார்ஜர்களை நிறுவியது , டெஸ்லா மாடல் 3 ஐ “சிங்கப்பூர் கார் நிலப்பரப்பில் பொதுவான காட்சியாக” மாற்றியது மற்றும் ஜூன் 10 அன்று மாடல் Y ஐ அறிமுகப்படுத்தியது போன்ற Christopher Bousigues-ன் பல சாதனைகளில் இவை அடங்கும்.

 

மேலும் சிங்கப்பூருக்கு புதிய மேலாளர் இல்லை என்றும் ஹாங்காங்கின் டெஸ்லா சிங்கப்பூரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் என்றும் The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேலும் தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையையும் வழங்கியிருந்தார் – ஒன்று அவர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் அல்லது பணிநீக்கம் செய்யப்பட நேரிடும் என்றும் கூறியுள்ளார்.