கஞ்சாவ சட்டப்பூர்வமாக்குனது நம்மூருல தான், சிங்கப்பூர்ல இல்ல – தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம் !

Weed & thai embassy

சிங்கபூருக்குள்  கஞ்சாவை கொண்டு வர வேண்டாம் என்று தாய்லாந்து தூதரகம் பயணிகளை எச்சரித்துள்ளது. தாய்லாந்து கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியதைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் உள்ள தாய்லாந்து தூதரகங்களும் இதே போன்ற எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளன.

 

ஜூன் 9 அன்று தாய்லாந்தின் போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டு, வணிக அல்லது தனிப்பட்ட மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்ப்பது மற்றும் வைத்திருப்பது இனி சட்டவிரோதமானது இல்லை என்று தாய்லாந்து அறிவித்தது. இதனால் சிங்கப்பூரில் உள்ள தாய்லாந்து தூதரகம் தாய்லாந்து பயணிகளை, கஞ்சா மற்றும் அதன் தயாரிப்புகளை சிங்கப்பூருக்கு கொண்டு வர வேண்டாம் என்று எச்சரித்தது. தென் கொரியாவில் உள்ள தாய்லாந்து தூதரகமும் தங்கள் முகநூல் பக்கத்தில், தாய்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் உள்ள தூதரகங்களும் இதேபோன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன, மேலும் கஞ்சாவுடன் பிடிபட்டால் சிறைத்தண்டனை, கடுமையான அபராதம் அல்லது மரண தண்டனை போன்றவை இருக்கும் என்றும் எச்சரித்தது.

 

இதனால் பல்வேறு குடிவரவு சோதனைச் சாவடிகளில் இனி அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கூறியுள்ளது. மேலும் போதைப்பொருள் உட்கொள்தல் அல்லது வைத்தல் போன்றவற்றிற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $20,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். போதைப்பொருளை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல் அல்லது கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், மரண தண்டனையை கூட பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.