சிங்கப்பூர் தைப்பூசம் 2023…. 30,000 பக்தர்கள், 200 காவடிகள்… பிரம்மாண்டமாக மீண்டும் வரும் தைப்பூசத் திருவிழா!

Singapore thaipusam
Singapore Thaipusam

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தைப்பூச பாத ஊர்வலம் நடைபெற உள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் அறிந்தது தான், கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு வருடங்களாக தைப்பூச பாத ஊர்வலம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை.

தவறான செயல்களுக்காக 7 பெண்கள் கைது – போலீசார் விசாரணை

இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 5 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

தைப்பூச பாத ஊர்வலத்தில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு இந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்று காணிக்கைகளைச் செலுத்தலாம்.

இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ள தைப்பூச ஊர்வலத்தில் சுமார் 30,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் அதிகமானோர் பால் குடம் சுமந்து செல்வார்கள் என்றும், சுமார் 200 பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் அறிய www.thaipusam.sg என்ற இணையத்தில் சென்று பார்வையிடலாம்.

சிங்கப்பூரில் 7 நீண்ட வார இறுதி விடுமுறை நாட்கள் – என்ஜாய் பண்ணுங்க