‘தைப்பூசத் திருவிழா’- ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Singapore thaipusam
Singapore Thaipusam stamp

சிங்கப்பூரில் உள்ள 15 டேங்க் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). இக்கோயிலில் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி

அதில், “மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜகோபுரம் வாசலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலகு (அல்லது) இரதக் காவடி எடுப்போர் தங்களுக்கு துணை வருவோரில் ஒருவரை (21 வயதிற்கு மேலாக இருக்க வேண்டும்) காவடி பிரதிநிதியாக நியமிக்க வேண்டும். காவடி எடுப்பவரும், காவடி பிரதிநிதியும் தங்கள் குழுவில் இடம் பெறுவோரின் நடத்தைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

Photo: Hindu Endowments Board

உடல்நலக் குறையுள்ள பக்தர்கள் (உதாரணமாக சர்க்கரை நோய், இருதய நோய், இரத்தக் கொதிப்பு) தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பிறகு காவடி எடுப்பதைப் பற்றி முடிவு எடுக்கவும். அலகு, இரதக் காவடி எடுக்கும் பக்தர்கள் ரேஸ்கோர்ஸ் சாலை நுழைவு வாயில் வழியாக பெருமாள் கோயிலுக்குள் வர வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் விற்பனை – அதிரடி சோதனையில் சிக்கிய நபர்

முடிகாணிக்கை செலுத்துவோரின் வசதிக்காக, கோயிலுக்கு அடுத்துள்ள ‘Teachew’ கட்டிடத்தின் அருகில் உள்ள மைதானத்தில் ஜனவரி 19- ஆம் தேதி முதல் பிப்ரவரி 3- ஆம் தேதி வரை காலை 07.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் முடியிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தைப்பூசத்திற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூசம் அன்று முடியிறக்கும் சேவை இருக்காது. வரும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இடம் பற்றாக்குறைக் காரணமாகவும், அதிக கூட்டம் இருப்பதால் பால்குடம் எடுக்கும் பக்தர்கள் தங்களது பால்குடங்களை வீட்டிலேயே தயார் செய்து எடுத்து வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Photo: Hindu Endowments Board

தைப்பூச திருவிழா அன்று கிளிமென்சியூ அவென்யூ சாலை தடுப்புகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு வர விரும்புபவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். அருகில் உள்ள MRT நிலையங்கள் டோபி காட் மற்றும் ஃபோர்ட் கேனிங் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்… சொந்த ஊரில் மர்ம நபர்கள் கைவரிசை – போலிசார் வலைவீச்சு

பால்குடச் சீட்டு, பால் காவடி, அலகு, இரதக் காவடி சீட்டுகளை thaipusam.sg என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். திருவிழா முழுவதிலும் மேற்கத்திய இசைக்கருவிகள், Amplifier- யைப் பயன்படுத்தக் கூடாது. தைப்பூசத் திருவிழா குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.